தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருட்கள் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அதே சமயத்தில், தமிழக காவல்துறை தமிழக முழுவதும் சோதனை செய்து, போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், போதைப் பொருள் வைப்பவர்களில் கைதாகும் பத்தில் ஐந்து பேர் Grindr என்ற செயலியை பயன்படுத்துவதாகவும், எனவே இந்த செயலியை தமிழ்நாடு அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.