மித்ரன் இயக்கத்தில் இணையும் சிவகார்த்திகேயன்-அர்ஜுன்!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (13:21 IST)
இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜூன் ஒப்பந்தமாகி  உள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஒரு படத்திலும், 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமாருடன் சயின்ஸ் பிக்சன்  படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் இரும்புத்திரை இயக்குநரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
 
ராஜா ராணி, தெறி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும், ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங்கையும்  கவனிக்கவுள்ளனர். இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்