விமான விபத்து - 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Webdunia
சனி, 19 மே 2018 (12:53 IST)
கியூபா விமான நிலையத்திலிருந்து 114 நபர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து 105 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயங்கர விபத்துக்கு ஆளானது.
 
விரைந்து வந்த மீட்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கோர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில் நுட்பக் கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்