லாரி கவிழ்ந்து விபத்து - 19 பேர் பரிதாப பலி

சனி, 19 மே 2018 (09:21 IST)
குஜராத்தில் சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில்   சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. சிமெண்ட் மூட்டைகளுக்கு மேல் பலர் அமர்ந்து பயணம் செயதுள்ளனர். 
 
லாரி பாவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 7 பேரை மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸார் விபத்து குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்