மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து படம் இயக்குவேன்.. ‘எலி’ இயக்குனர் யுவ்ராஜ் தகவல்!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (08:05 IST)
போட்டோ போட்டி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் யுவ்ராஜ் தயாளன். அந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், நல்ல கவனத்தைப் பெற்றது. அதையடுத்து வடிவேலுவோடு ‘தெனாலி ராமன்’ மற்றும் ‘எலி’ ஆகிய இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார்.

இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வொர்க் அவுட் ஆகவில்லை. அதனால் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு இப்போது விக்ரம் பிரபு, விதார்த் மற்றும் ஸ்ரீ நடிப்பில் ‘இறுகப்பற்று’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் “வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து ஒரு படம் இயக்குவேன். அந்த படம் எனக்கு பிடித்தது போல இருக்கும்” என யுவ்ராஜ் தயாளன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்