சந்திரமுகி 2 படத்தின் கங்கனா கேரக்டர் லுக் அறிமுகம்!

சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:54 IST)
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸின் கேரக்டர் லுக் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் கங்கனாவின் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்