பிக்பாஸ் நடிகரின் படத்திற்காக 10 பாடல்கள் கம்போஸ் செய்த யுவன்!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:28 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று திரையுலகில் வாய்ப்பை பெற்றவர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண் என்பது தெரிந்ததே. ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை தொட்ட ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்து வரும் திரைப்படம் ஸ்டார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் சாயலில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்காக பத்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாகவும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும் அளவுக்கு சிறப்பாக வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவு செய்து வருகிறார். பிரசன்னா ஜேகே படத்தொகுப்பு பணி செய்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்