ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரின் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஜெயம் ரவி, நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலிஸாகியுள்ளது.
விஞ்ஞானி ஒருவர் விவசாயத்தைக் காக்க போராடுவது என்ற கதைதான் பூமி என்றாலும், அது படமாக்கப்பட்ட விதம் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் கடுமையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. எதையும் காட்சியாக காட்டாமல் பிரச்சாரம் தொனிக்கும் படமாக இருப்பது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக விவசாயத்தைக் காப்பாற்றுவது போல படம் எடுத்தால் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையில் எடுத்து வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.