தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் சீசன் - 3' களைகட்டிய முடிவடைந்து விட்டது. பல களேபரங்கள் சர்ச்சைகளுக்கு பின் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் ஒன்று குறைந்துள்ளது.
இனி அடுத்த பிஸ் பாஸ் 4 எப்போது ? அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் ? யார் தொகுத்து வழங்குவது ? என்பது போன்ற கேள்விகளை மக்கள் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சேரனுக்கு ஏராளமான மக்கள நெருக்கமாகி விட்டனர்.
இந்நிலையில், இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் , இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடன் அவர் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவுடன் அவர் பதிவிட்டுள்ளதாவது :
பாரதிகண்ணம்மா பூஜை அழைப்பிதழுக்கு இப்படி ஒரு போட்டோ உங்கள் அருகில் இருந்து எடுத்து அதைத்தான் அச்சிட்டேன் சார்.. 22 வருடங்களுக்கு பின் அதேபோல ஒரு போட்டோ..