வாவ்..! ரஜினியின் அடுத்த பட லுக் இதுதானா..? தெறிக்கவிடும் போஸ்டர்..!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (15:11 IST)
ரஜினியின் பக்கா மாஸான தோற்றத்தில் போஸ்டர் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. 



 
ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வெளிவந்த படம்  'பேட்ட'  இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி சாதனையை படைத்துவருகிறது. தற்போது வரை இப்படம்  ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் மழை பொழிந்துள்ளதாக தகவல் கிடைத்தது. 
 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின அப்டேட்ஸ் வந்தவண்ணமாகவே உள்ளது.
 
அந்த வகையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் 'ரஜினிகாந்த் 166' என்ற போஸ்டரை உருவாக்கி அதனை இணையதளங்களில் வைரலாக்கியுள்ளார். 


 
அந்த போஸ்டரில் ரஜினியின் மாஸான லுக் பார்ப்பவர்களை மெசிலிர்க்கவைக்கிறது. கண்களில் கருப்புக்கண்ணாடி, முகத்தில் வெள்ளைத்தாடி, வாயில் பீடியுடன் ரஜினியின் ஸ்டைல் தெறிக்கவிடும் அளவிற்கு அமைந்துள்ளது. இந்த போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள்  பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்