70, 80களில் பண்டிகை நாட்களில் 12 படங்கள் வெளியாகும். அதில் 10 படங்கள் இளையராஜா இசையில் தான் வெளியாகும். ஒரே நாளில் தூக்கமில்லாமல் மூன்று படங்களுக்கு ரீரெக்கார்டிங் செய்திருக்கிறார். அவர் ரீரெக்கார்டிங் செய்தாலே படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் இசையமைத்து வெற்றி பெற்ற படங்கள் எத்தனையோ உள்ளன. பல தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமலே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
என்னுடைய படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நன்றாக இசையமைத்துள்ளார் என ரஜினிகாந்த் கூறினார். இந்த கருத்தை மறுத்த இளையராஜா, என்னை பொறுத்தவரை இசை தான் பிரதானம். அப்படி பார்த்தால் ராமராஜன் படங்களுக்கு அதைவிட நன்றாக இசையமைத்துள்ளேன் என்றார்.