உங்களுக்கு யாரை பிடிக்கும் விஜய் - அஜித் ? என்ன இப்படி சொல்லிட்டாங்களே மஞ்சிமா .!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (14:47 IST)
தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித்.


 
பெரும்பாலான நடிகைகள் இவர்களுடன் நடிப்பதையே தங்கள் கனவாக நினைப்பதுண்டு அப்பேற்பட்ட ஜாம்பவான்களான அஜித் , விஜய் இவர்களில் உங்களுக்கு யார் பிடிக்கும்  என  ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடி கொண்டிருந்த நடிகை மஞ்சிமா மோகனிடம் ரசிகர்கள் கேட்டனர். 
 
அதற்கு மிகவும் சாதுரியமாக  பதிலளித்த நடிகை மஞ்சிமா மோகன்,  எனக்கு 2 பேரையும் பிடிக்கும் என்று கூறி லாவகமாக எஸ்கேப் ஆகிவிட்டார். ஒரு வேலை இந்த 2 ஹீரோக்களுடன் நடிக்க விருப்பம் கொண்டதால் தான் பாரபட்சம் பார்க்காமல் 2 போரையும் தனக்கு பிடிக்கும் என்று கூறிவிட்டாரோ என்னமோ.
 
இவர் தற்போது மலையாளத்தில் ‘சம் சம் ‘ என்ற படத்திலும், தமிழில் ‘தேவராட்டம் ‘ என்ற படத்திலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்