முருகதாஸிடம் கெடுபிடி காட்டும் விஜய்…. காரணம் இதுதானா?

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (09:41 IST)
நடிகர் விஜய் முருகதாஸ் சொல்லியுள்ள கதையில் பல மாற்றங்களை சொல்லியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்குக் காரணம் விஜய்தான் என சொல்லப்படுகிறது. அறிவிப்பை வெளியிட வேண்டாமென சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விஜய் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஏஆர் முருகதாஸ் கூறிய கதையின் முதல் பாதி விஜய்க்கு பிடித்த இருந்ததாகவும் ஆனால் இரண்டாம் பாதி அவருக்கு திருப்தி இல்லை என்றும் அதனை சரிசெய்து கொண்டு வருமாறு ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் ஏஆர் முருகதாஸின் முழு கதையும் தனக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 

விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் என மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த முருகதாஸிடமே கதை விஷயத்தில் விஜய் இவ்வளவு கறாராக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதெற்கெல்லாம் காரணம் கடைசியாக முருகதாஸ் இயக்கி அட்டர் பிளாப் அன தர்பார் படம்தான் காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்