நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரை சூப்பர் ஸ்டாருமான நடிகர் சஞ்சீவ் இன்றளவும் விஜய்யின் பாசத்துக்குரியவராக இருந்து வருகிறார். இவர் நட்பின் காரணமாக தனது மகனுக்கே சஞ்சய் எனப் பெயர் வைத்ததாகக் கூட சொல்வார்கள். சில தினங்களுக்கு முன்னர் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட கொரோனா தாக்கிவிட்டதோ என பயந்த சஞ்சய், மனைவி மற்றும் குழந்தையை அவர்களின் உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனிமையில் இருந்துள்ளார்.