பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தான் நடித்த 99 சதவீதப் படங்களில் தன்னுடைய உடல் எடை குறித்து கேலி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். அதில் “பவர் பாண்டி படம் தவிர மீதி எல்லா படங்களிலும் என்னை உருவ கேலி செய்தார்கள். பலரும் ஏன் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் கேட்கிறார்கள். நான் இதுபற்றி கேட்டால் அவர்கள் என்னை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை வைத்து எடுப்பார்கள். என் வாய்ப்புதான் போகும்” எனக் கூறியுள்ளார்.