நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தான் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை ஷூட்டிங்கின் முதல் நாளிலேயே கணித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார். அது சம்மந்தமாக பேசும்போது “ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் ஷூட்டிங்கில் முதல் நாளிலேயே நான் இயக்குனரிடம் சொன்னேன். என்னுடைய கரீனா சோப்ரா கெட்டப் அவ்வை சண்முகி போல தத்ரூபமாக இருந்தால்தான் அது வொர்க் ஆகும் என்று. ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் சொன்னதை நான் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தேன். அந்த மாதிரியான நேரங்களில் நாம் அதைதான் செய்யமுடியும்” எனக் கூறியுள்ளார்.