சசிக்குமார் நடித்து பெரும் ஹிட் அடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியான நிலையில், அதை படத்தில் வைத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. காமெடி எண்டெர்டெயின்மெண்ட் படமான டூரிஸ்ட் ஃபேமிலிக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக கிடைத்த நிலையில் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் வசூலை குவித்துள்ளது.
இந்த படத்தில் ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு சிம்ரன் ஆடும் காட்சி தியேட்டரில் ரசிகர்களுக்கு வைப் மெட்டீரியலாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலியின் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் யூட்யூபில் வெளியிட்டுள்ளனர்.
அதில் சுந்தரபாண்டியன் படத்தில் வரும் கொண்டாடும் மனசு பாடலுக்கு சசிக்குமார் ஆடுகிறார். சசிக்குமார் சினிமா கெரியரில் சுந்தர பாண்டியனுக்கு முக்கியமான இடமுண்டு. சசிக்குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாக காரணமாக அமைந்த படம் சுந்தர பாண்டியன். இந்நிலையில் அந்த பாடலுக்கு சசிக்குமார் ஆடும் காட்சி தியேட்டரில் வந்திருந்தால் வைப் மொமெண்டாக இருந்திருக்கும், இதை ஏன் தியேட்டரில் கட் செய்தீர்கள்? என ரசிகர்கள் கமெண்டில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K