விஷால் ஏன் இப்படி இருக்கிறார்?... நெருங்கிய நண்பரான விச்சு விஸ்வ்நாத் அளித்த பதில்!

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (09:39 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால்.  தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்த அவர் சமீபமாக ‘மார்க் ஆண்டனி’ தவிர மற்ற எந்த வெற்றியையும் கொடுக்கவில்லை. இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலெட்சுமி உள்ளிட்டோர் நடித்த ‘மதகஜராஜா’ படம் கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு வந்த விஷால் கண்ணாடி அணிந்து, கை நடுநடுங்க பேசியது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது முதலாக ’விஷாலுக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என சமூக வலைதளங்கள் முழுவதும் பேச்சாக இருந்தது.

இதையடுத்து அவரின் உடல்நிலைக் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரவின. இந்நிலையில் இப்போது விஷாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான விச்சு விஸ்வநாத் “விஷாலுக்கு குளிர் காய்ச்சல்தான். ஒரு நடிகர் என்ற முறையில் நாங்கள் அவருக்கு நிகழ்ச்சி குறித்து அறிவித்தோம். அவர்தான் உடல்நலம் முடியவில்லை என்றாலும் கண்டிப்பாக நான் வருவேன் என்று வந்தார். மற்றபடி அவருக்கு ஒன்றுமில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்