1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி எர்ணாகுளத்தில் பிறந்த இவர் இசையை முறைப்படி கற்று 1970 களில் மேடைப் பாடகர் ஆனார். அங்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து சினிமாவில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழில் எம் எஸ் விஸ்வநாதன் தொடங்கி ஜி வி பிரகாஷ் குமார் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளார்.
அவர் பாடியதில் காலத்தால் அழியாத பாடல்களாக வசந்த கால நதிகளிலே, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, ஒரு தெய்வம் தந்த பூவே, கத்தாழங் காட்டு வழி, என் மேல் விழுந்த மழைத்துளியே உள்ளிட்ட பாடல்கல் இன்றளவும் ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகின்றன. அவரின் மறைவுச் செய்தியறிந்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.