விஷாலின் "சக்ரா" ரிலீஸ் தேதி முடிவு - கொண்டாட்டத்தில் திரை விரும்பிகள்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:15 IST)
விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
இதற்கான பேச்சுவார்த்தைக் கூட முடிந்த நிலையில் இப்போது கடைசி நேரத்தில் சக்ரா திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய விஷால் முடிவெடுத்துள்ளாராம். இதற்குக் காரணம் சமீபத்தில் தியேட்டரில் ரிலீஸாகி பெருவெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படமே.
 
அதற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கிய படக்குழு தற்ப்போது ரிலீஸ் தேதியை முடிவுசெய்துள்ளனர். ஆம், வருகிற பிப்ரவரி 19-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக  சமீபத்திய தகவல் வெளியாகி திரைப்பட ரசிகர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்