2020 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் மோசமான ஆண்டாக அமைந்தது – விஷ்ணு விஷால் உருக்கம்!

சனி, 30 ஜனவரி 2021 (10:30 IST)
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க வந்து 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களன்களை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டவர் விஷ்ணு விஷால். இப்போது தன் கைவசம் 6க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ள அவர் சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் முதல் முதலாக உருவான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து சமூகவலைதளத்தில் தனது சினிமா பயணம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

அதில் ’12 ஆண்டுகள் நம்ப முடியாத பயணம், இந்த பயணம் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. வரும் ஆண்டுகளில் இன்னும் சாதிக்க முயல்வேன். கடந்த ஆண்டு நம் அனைவருக்குமே மோசமான ஆண்டாக அமைந்தது. எனக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்