ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. நேற்று வரை சுமார் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் டிக்கெட் முன்பதிவு நடந்துள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முன்பதிவு அடுத்தடுத்து வரும் நாட்களில் அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது.