பவன் கல்யாணுடன் ஜோடி சேரும் சிம்பு நாயகி!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:10 IST)
நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் இயக்குனர் க்ரிஷ் இயக்கவுள்ள படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசியலில் ஆர்வம் காட்டிய பவன் கல்யாண், சிறிது காலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார். ஆனால் படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் சினிமா பாதைக்கு திரும்பி 4 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் வக்கீல் சாப் படத்தை நடத்தி முடித்துள்ளார்.

இதையடுத்து இயக்குனர் க்ரிஷ் இயக்கும் படத்துக்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தின் நாயகியாக சிம்புவோடு ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்