விக்ரம் படத்தின் அட்டகாசமான புதிய ப்ரோமோ… இணையத்தில் வைரல்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (16:07 IST)
விக்ரம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. அதையடுத்து தற்போது 24 நொடிகள் ஓடும் புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெற்ற wasted பாடலின் இசையோடு இருக்கும் இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sony Music South (@sonymusic_south)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்