விசாகப்பட்ணம் எனது இரண்டாவது வீடு… ஒரே நாளில் ஸ்டாராக்கியது- கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

vinoth

வெள்ளி, 30 மே 2025 (12:18 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடந்தது. அதையடுத்து பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் ஐதராபாத் என விளம்பரப் பணிகளுக்காக கமல்ஹாசன் பறந்து வருகிறார்.

இந்நிலையில் விளம்பரப் பணிகளின் ஒரு கட்டமாக விசாகப்பட்டிணம் சென்ற கமல்ஹாசன் அங்கு மரோசரித்ரா படத்தின் ஷூட்டிங் நடந்த அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “விசாகப்பட்டிணம் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. மரோசரித்ரா படம் வந்த பின்னர் விசாகப்பட்டிணம் என்னை ஒரே இரவில் ஸ்டார் ஆக்கிவிட்டது.  நான் 15 நேரடித் தெலுங்கு படங்களில் நடித்துள்ளேன். அதில் 13 படங்கள் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்ஸ்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்