திருநங்கையாக மாறி நடனமாடும் விஜய் சேதுபதி: வைரல் வீடியோ

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (14:51 IST)
விஜய்சேதுபதியை வைத்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.


இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ ஃபகத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதிக்கு  இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நடனம் ஆட சொல்லி கொடுக்கிறார்.

இந்த வீடியோவை விஜய் சேதுபதி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்