இசைஞானியுடன் விஜய்சேதுபதியின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செவ்வாய், 23 அக்டோபர் 2018 (14:49 IST)
குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவாக மாறிவிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சீனுராமசாமி இயக்கத்தில் நடித்த தர்மதுரை படம் மிகப்பெரிய  ஹிட்டானது.


இந்நிலையில் தர்மதுரை படத்துக்கு பிறகு சீனுராமசாமி இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.
 
இப்படத்திற்கு மாமனிதன் என தலைப்பிட்டுள்ளனர். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளனர். இப்படத்தை ஒய்எஸ்ஆர் நிறுவனம் சார்பில் யுவன்சங்கர் ராஜா தயாரிக்கிறார். படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் துவங்க உள்ளது.
 
இந்நிலையில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழிற்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சினுராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி கிடப்பில் கிடந்த இடம் பொருள் ஏவல் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்