பிரபல இயக்குநருடன் விஜய்சேதுபதி சந்திப்பு!!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:24 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விஜய்சேதுபதி இன்று அவரது குருவும், இயக்குநருமான சீனுராமசாமியைச் சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தென்மேற்குப் பருவக்காற்று என்ற படத்தின் மூலம் நடிக ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய்சேதுபதி. இப்படத்தை சீனுராமசாமி இயக்கினார்.

இதையடுத்து, சீனுராமியின் இயக்கத்தில் தர்மதுரை உள்ளிட்ட படங்களில் விஜய்சேது நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சீனுராமி அடுத்து இயக்கிவரும் படம் ’’இடி முழக்கம்’’. இப்படத்தில் ஜிபி.பிரகாஷ்குமார் நடித்து வருகிறார்.

இன்று இப்படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்ற விஜய்சேதுபதி, இயக்குநர் சீனுராமசாமியைச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.#MakkalSelvan #VijaySethupathi

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்