வாடிவாசல் படத்டின் டைட்டில் போஸ்டர் இந்த படத்தின் காப்பியா?

சனி, 17 ஜூலை 2021 (16:38 IST)
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.

அசுரன் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவை நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஸ் இசையமைக்கவுள்ளார்.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் வேலைகள் முடிந்தபின்  வாடிவாசலின் நடிக்கவுள்ளார் அவர். இந்நிலையில் தயாரிப்பாளார் தாணு வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டிருந்தார். அதில்  வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியாகியுள்ளது. பழைய நாணயம் ஒன்றில் ஜல்லிக்கட்டு காளையின் படம் பொறிக்கப்பட்டு இருக்கும் விதமாக டைட்டில் லுக் இருந்தது.
ஆனால் இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஜூராசிக் பார்க் திரைப்படத்தின் டைட்டில் லுக் போலவே உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்