விஜய் 62’ ஃபர்ட்ஸ் லுக் எப்போது ரிலீஸ்?

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (15:30 IST)
‘விஜய் 62’ படத்தின் ஃபர்ட்ஸ் லுக், கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுக்கு ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது.


 
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ள படம் இது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
‘விஜய் 62’ படத்தில் க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் ஆர்ட் டைரக்டராகவும் பணியாற்ற உள்ளனர். இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுக்கு ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்