2026 ஆம் ஆண்டு கப்பு முக்கியம் பிகிலு…. தேர்தல் பற்றி நாசூக்காக பதிலளித்த விஜய்!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (06:51 IST)
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார்.

அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். அதில் “2026 ஆம் ஆண்டைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்” எனக் கேட்க  அதற்கு விஜய் “2025 ஆம் ஆண்டுக்குப் பிறகு வரும் ஆண்டு. புட்பால் வேர்ல்ட் கப் வருது. போய் காலண்டர்ல பாருங்க. கப்பு முக்கியம் பிகிலு” எனக் கூறினார்.

கால்பந்து உலகக் கோப்பை பற்றி அவர் சொன்னாலும் சூசகமாக 2026 ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை குறிப்பிட்டுதான் “கப்பு முக்கியம் பிகிலு” என்ற வார்த்தையைக் கூறியதாக ரசிகர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்