'லியோ' படம் சூப்பராக இருந்திருந்தால்? வலைப்பேச்சு அந்தனன்
புதன், 1 நவம்பர் 2023 (13:31 IST)
சுமாரான படத்திற்கே இப்படியொரு கலெக்ஷன் என்றால், லியோ சூப்பராக இருந்திருந்தால்? என்று லியோ பட வசூல் விவகாரம் பற்றி பிரபல சினிமா விமர்சகர் விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், லலித் தயாரிப்பில் உருவான திரைப்படம் லியோ
இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில், இப்படம் முதல் நாள் இந்த படம் 148 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 12 நாட்களில் இந்த படம் 540 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எனவே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்காததால் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தனன் தன் வலைதள பக்கத்தில் லியோ மற்றும் ஜெயிலர் பட வசூல் விவகாரம் பற்றி விமர்சித்துள்ளார்.
அதில், 12 நாளில் லியோ 540 கோடி
12 நாளில் ஜெயிலர் 510 கோடி
சுமாரான படத்திற்கே இப்படியொரு கலெக்ஷன் என்றால், லியோ சூப்பராக இருந்திருந்தால்?
இதன்மூலம் அறியப்படும் நீதி- எதுக்கு வம்பு? இனி எடுக்கிற படத்தையும் சுமாராவே எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
12 நாளில் லியோ 540 கோடி
12 நாளில் ஜெயிலர் 510 கோடி
சுமாரான படத்திற்கே இப்படியொரு கலெக்ஷன் என்றால், லியோ சூப்பராக இருந்திருந்தால்?
இதன்மூலம் அறியப்படும் நீதி-
எதுக்கு வம்பு? இனி எடுக்கிற படத்தையும் சுமாராவே எடுப்போம்