'லியோ சக்சஸ் விழா'வுக்கு விஜய் வருகை..வைரல் வீடியோ

புதன், 1 நவம்பர் 2023 (19:29 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் லியோ. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், விவிஐபிக்கள் மற்றறும் விஜய் மக்கல் இயக்க நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லியோ விழாவில் பாஸ், ரசிகர்கள் மன்ற அடையாள அட்டை, ஆதார் ஆகிய 3 ம் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், லியோ வெற்றி விழா தொடங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் மடோனா, திரிஷா, லலித்குமார், லோகேஷ் கனகராஜ்  ஆகியோரை அடுத்து, நடிகர் விஜய் வருகை புரிந்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். ஆடியோ விழா நடக்காத நிலையில், இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார்? என்ன கதை கூறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
.

G.O.A.T entry

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்