இளையதளபதி விஜய்யிடம் வாழ்த்து பெற்ற வாரிசு நடிகர்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (11:42 IST)
சத்யராஜின் திரையுலக வாரிசான சிபிராஜ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் 'சத்யா'. இந்த படத்திற்கு ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்துள்ளதால் கடந்த மூன்று நாட்களிலும் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த படம் சென்னையில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் சுமார் ரூ.50 லட்சம் வசூல் செய்துள்ளது.
 
இந்த நிலையில் சத்யா' படத்தின் வெற்றியை சிபிராஜ் கொண்டாடும் வகையில் இளையதளபதி விஜய் அவரை அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த தகவலை சிபிராஜ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
சிபிராஜ் தனது டுவிட்டரில் கூறியதாவது: விஜய் அண்ணா என்னை அழைத்து சத்யா' படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்' என்று தெரிவித்தது பெருமைக்குரிய விஷயம் என்று கூறியுள்ளார். சிபிராஜ், விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்