ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் ‘விஜய் 62’. சன் பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ரகுல் ப்ரீத்சிங், விஜய் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.
இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஓவியாவை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், ஹீரோயின் வேடம் இல்லையென்றதும் ஓவியா மறுத்துவிட்டாராம். எனவே, அவருக்குப் பதில் ஜூலியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூலி ஏற்கெனவே விமலின் ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.