சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (11:37 IST)
மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமயி மலையாள படம் ஒன்றின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 
நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமயி நடிக்க வந்துள்ளார். அவர் சுமேஷ் லால் இயக்கும் குஞ்சி அம்மையும் அஞ்சு மக்களும் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.  சென்னையில் விஸ்காம் படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமயி இந்த படம் மூலம் ஹீரோயினாகிறார். 
 
இப்படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது. கலாபவன் சஜோன், டாம், ஸ்ரீஜித் ரவி, பினு பப்பு, இர்ஷாத் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். அப்ரா பிலிம்ஸ் குஞ்சி அம்மையும் அஞ்சு மக்களும் படத்தை தயாரிக்கிறது.
 
கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீமயியை ஊர்வசி தான் மீடியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்