தூசு தட்டப்படும் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ – இன்று வெளியாகும் டிரைலர்!

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (14:11 IST)
விஜய் ஆண்டனி நடித்த திரைப்படங்களில் ஒன்று தமிழரசன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் நீண்டகாலமாக தாமதமாகி வந்தது.

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இந்த படத்தில் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், கஸ்தூரி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி ஏற்கனவே கொலை, ரத்தம், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன், அக்னி சிறகுகள், வள்ளிமயில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு வரிசையாக இவரது படங்கள் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்