நயன்தாராவின் ‘கனெக்ட்’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதன், 7 டிசம்பர் 2022 (09:07 IST)
நயன்தாரா மற்றும் அனுபம் கெர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கனக்ட் திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

திருமணத்துக்குப் பிறகு  நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்போது கனெக்ட் படத்தின் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரைலர் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்