விஜய்யால் மற்றக் கலைஞர்களின் சம்பளத்தில் கைவைத்த ஏஜிஎஸ்… தளபதி 68 அப்டேட்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (07:39 IST)
பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்காக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் உலாவந்தது. அதன் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பட்ஜெட்டைக் கட்டுக்குள் கொண்டுவர படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளதாம் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம்.

ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படத்தில் பணியாற்றும் பல கலைஞர்களுக்கு அவர்கள் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட குறைவாகவே கொடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்