லியோ படத்தின் டிரைலரைப் பார்த்த வசனகர்த்தா… பதிவிட்ட ட்வீட்டால் ரசிகர்கள் ஆர்வம்!

புதன், 4 அக்டோபர் 2023 (07:09 IST)
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் படத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது. இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் திரைக்கதையில் பணியாற்றியுள்ள ஜில் ஜங் ஜக் இயக்குனர் தீரஜ் வைத்தி லியோ படத்தின் டிரைலரை பார்த்துவிட்டதாக கூறி “தற்போதுதான் லோகேஷை சந்தித்து லியோ டிரைலரை பார்த்தேன். டிரைலர் பார்த்தபின்னர் தாவம்பட்டை எல்லாம் கீழே கிடக்கும்” என சிலாகித்து பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்