#LeoTrailer: விஜயின் 'லியோ டிரைலர் 'இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ..ரசிகர்கள் மகிழ்ச்சி

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:35 IST)
விஜயின் 'லியோ' பட டிரைலர்  சன்டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் லியோ.
 
இப்படத்தை  லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் படத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.
 
இந்நிலையில் இப்போது படத்தின் சென்சார் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5    ஆம் தேதி வியாழக்கிழமை  வெளியாகும்  என லியோ படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை    அறிவித்திருந்தது.

இந்த  நிலையில், இந்த டிரைலர் வரும்  5 ஆம் தேதி சன் டிவியின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் என சன்டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

Locked and loaded!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்