“என் படத்தையெல்லாம் யார் பார்ப்பார்கள் என்று சொன்னார்கள்…” மேடையில் ஆதங்கத்தைக் கொட்டிய சித்தார்த்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (07:32 IST)
கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையடுத்து இப்போது இந்த படம் அக்டோபர் 6 ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சித்தார்த் “இந்த படம் தெலுங்கிலும் செப்டம்பர் 8 ஆம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால் என்படத்தையெல்லாம் யார் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள் எனக் கூறினார்கள். அதனால் படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை.

கடைசியாக ஏஸியன் பிலிம்ஸ் சுனில் படத்தைப் பார்த்து என் மேல் நம்பிக்கை வைத்து படத்தை வாங்கியுள்ளார். நீங்கள் நல்ல சினிமாவை விரும்பினால், தயவு செய்து இந்த படத்தை திரையரங்குக்கு சென்று பாருங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்