கண்ணான கண்ணே நீ கலங்காதடி - இணையத்தை அசத்தும் விக்னேஷ் சிவனின் பதிவு!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (13:07 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.

மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் செல்லும் இவர்கள் தற்போது கொரோனா ஊரடங்கில் தங்கள் காதல் வளர்ந்து வந்த பயணத்தை நினைவுகூர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். ஆம், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் " நானும் ரௌடி தான் படத்தின் கண்ணான கண்ணே நீ பாடல் படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும்போது ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் எடுத்த வீடியோ என கூறி செம வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்