ரியல் சிங்கபெண்ணிற்கு இன்று பிறந்தநாள்: ஹேப்பி பர்த்டே லட்சுமி அகர்வால்!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (12:11 IST)
டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணை கடந்த 2005 ஆம் ஆண்டு நஹிம் கான் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தான்.


அந்த காதலுக்கு லட்சுமி  மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்து அவர் மீது ஆசிட் வீசி நிலைகுலைத்து விட்டான் நஹிம்.


இந்த கொடூர சம்பவத்துக்கு பிறகும் மனம் தளராமல், தன்னை போல  ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகத்  தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தியன் மூலம் உலக புகழ் பெற்றார்  லட்சுமி அகர்வால்.  


இந்த சிங்கப்பெண்ணை பெருமைப்படுத்தும் விதத்தில்  "சப்பாக்" என்ற படத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்தார். அந்த படம் மெகா ஹிட் அடித்தது.  

தனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கணவன் குழந்தை என மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் லட்சுமி அகர்வால்  இன்று தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


வாழ்வை வென்றெடுத்த தேவதைக்கு பிரபலங்கள்,  இணையவாசிகள்  என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்