எல் ஐ சி படத்தின் ஷூட்டிங்கை ஈஷா மையத்தில் தொடங்கிய விக்னேஷ் சிவன்!

vinoth
செவ்வாய், 23 ஜனவரி 2024 (07:14 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் இந்த படத்தை  முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். படத்தில் ப்ரதீப்புக்கு சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் கோவை ஈஷா மையத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியுள்ளது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்