விஜய்க்கு போட்டியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்..!

Mahendran

செவ்வாய், 25 ஜூன் 2024 (15:22 IST)
விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்டி என்ற தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கங்கனா ரனாவத் இன்று முதல்முறையாக பாராளுமன்றத்திற்கு சென்று எம் பி ஆக பதவி ஏற்றுக்கொண்டார். 
 
இந்த நிலையில் அவர் கஙகனா ரனாவத் நடித்து, இயக்கி, தயாரித்த எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 என தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். விஜய்யின் கோட் திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த நாளே கஙகனா ரனாவத் நடித்த எமர்ஜென்சி திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இருப்பினும் எமர்ஜென்சி திரைப்படத்திற்கு தென்னிந்தியாவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்காது என்பதால் ’கோட்’ படத்திற்கு போட்டியாக இருக்காது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்