காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ டிரைலர்..!

Mahendran

செவ்வாய், 25 ஜூன் 2024 (19:31 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. 
 
இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் கமல்ஹாசனின் வித்தியாசமான பல கெட்டப், ஷங்கரின் பிரமாண்டமான காட்சிகள், அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை சித்தார்த் உள்ளிட்ட சிலரின் நடிப்பு ஆகிய அனைத்தும் அம்சமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்தியன் முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் கெட்டவர்களை அழிக்கும் இந்தியன் தாத்தா, இந்தியன் தாத்தாவை பிடிக்க காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் என்ன திட்டமிடுகின்றனர் என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் முதல் பாகத்தை விட இந்த படம் சிறப்பான விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்றும் கிராபிக்ஸ் காட்சிகள் அசத்தலாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்