ரீமேக் உரிமை தொடர்பான சிக்கலால்தான் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப் போனதா?

vinoth
புதன், 1 ஜனவரி 2025 (06:59 IST)
அஜித் நடிப்பில்மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தைத் திரையில் பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தன. ஆனால் திடீரென்று லைகா நிறுவனம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என அறிவித்துள்ளது.

இந்த தள்ளிவைப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. இன்னும் அனிருத் பின்னணி இசை பணிகளை முடிக்கவில்லை என்றும் சென்சார் செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் முக்கியமாக விடாமுயற்சி திரைப்படம் ‘பிரேக்டவுன்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்றும் முறையாக அதன் உரிமையைப் பெறாமல் படமாக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சம்மந்தப்பட்ட படத் தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர்களுக்கு தரவேண்டிய உரிமைத் தொகையை தருவதில் நடந்த பேச்சுவார்த்தை இன்னும் முடியாததே முதற்காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்