அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார்.
படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது சேனலில் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலில் உள்ளதாகவும் அதனால் அவர்களுக்கு மிகப்பெரிய நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால்தான் சமீபத்தில் ரிலீஸான பாடலில் கூட ரிலீஸ் தேதி போடவில்லை எனவும் படமும் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை என்பதையும் காரணமாக அவர் கூறியுள்ளார்.