விடாமுயற்சி தள்ளி வைக்கப்பட்டதால் பொங்கலுக்கு வருகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

vinoth

புதன், 1 ஜனவரி 2025 (08:17 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் சமீபத்தில் ரிலீஸாகி குறிப்பிடத்தகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மதுரையில் நடந்து வந்த நிலையில் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் எனவும் பின்னர் முதல் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸாகும் எனத் தகவல்கள் பரவி வந்தன.

தற்போது விடாமுயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் பொங்கல் ரிலீஸில் இருந்து ஒதுங்கிக் கொள்ள ‘வீர தீர சூரன்’ இரண்டு வாரங்கள் முன்னதாகவே பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளில் தற்போது படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்